No.03The latest letter
தீர்மானங்களும் தடுமாற்றங்களும்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்கள் அனைவரையும் புதிய ஆண்டில் சந்திப்பதில் பெருமகிழச்சி அடைகின்றேன். புதிய ஆண்டை காண செய்த ஆண்டவர் தாமே உங்களை புதிய நன்மைகளினாலும் கிருபைகளினாலும் முடிசூட்டுவாராக.
புதிய ஆண்டு என்றதுமே நம் நினைவுக்கு வருவது நாம் எடுக்கும் தீர்மானங்கள் தான். தீர்மானம் நம்மை ஆண்டவர் பார்வையில் அவரின் சிறந்த பிள்ளைகளாக உலக பார்வையில் சிறந்த மனிதர்களாக நம்மை தன்னால் தானே செதுக்க உதவுகின்றன. அந்த வகையில் தீர்மானம் எடுப்பது ஆகசிறந்தது. ஆனால் எடுத்த தீர்மானங்களை காபாற்றுவது பின்பற்றுவது என்பது மிகவும் கடினமான ஒரு காரியம்.
இதற்கு ஆதாரமாக இங்கிலாந்து தேசத்தை சேர்ந்த லாளலி, தன்னுடைய ஆய்வு அறிக்கையில் சொல்வது என்னவென்றால் எந்தவொரு தீர்மானத்தையும் ஒருவர் தன்னுடைய பழக்கமாக மாற்றுவதற்கு குறைந்தபட்சம் 18 நாட்கள் ஆகும் என்கின்றார். ஆனால் அதே ஆய்வறிக்கையில் அவர் குறிப்பிடுவது 33% சதவீத மக்கள் ஒரு மாதத்திற்குள்ளக தாங்கள் எடுக்கும் தீர்மானத்தில் தோற்றுவிடுகின்றனர். அதின்நிமித்தம் வழி தவறுகின்றனர், பழைய வழிக்கு செல்கின்றனர், தீர்மானத்தை விடுகின்றனர், தடுமாறி போகின்றனர்.